We are one of the trade unionist for the poor plantation community in Srilanka . And we fight for the Rights of all Human community in Srilanka. Where ever INJUSTICE Happening to human our voice will be there. No matter where I am and What I am.Please Visit To My Fb NEW WORKERS FRONT for more details and post.

WITH KIND REGARDS., RAGUNATHAN MURALITHARAN. PRESIDENT/LEADER. NEW WORKERS FRONT. SRILANKA.

மலையக மக்களுக்காக பாராளுமன்றம் சென்றோம் என்று சொல்லும் மலையக தலைமைகள் மலையக மக்களின் தேவைகளை,உரிமைகளை ,மறந்து செயல்படுகின்றனர். புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதன். அன்மையில் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி தான் பட்டம் பெற்ற ,படித்த, மலையக மக்களின் பிள்ளைகளுக்கு அரசாங்க தொழிற்துறை மறுக்கப்படுகின்றன. என்ற தொனி. ஆனால் இவை மாற்று இனங்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன என்ற செய்தியும் வெளிவந்தன. உன்மை இதை யாரும் மறுப்பதற்கில்லை. நான் கேற்கின்றேன் பத்திரிக்கைகளில் கருத்து தெரிவிக்கும் மலையக தலைமைகள் நீங்கள் இருக்கும் இடம் பாராளுமன்றம்.அப்படியாயின் ஏன் நீங்கள் இவ்வாறாண குறைகளை பாராளுமன்றிலே பிரேரணை மூலமாக முன்மொழிந்து அரச தரப்பினர் ஆதரவை கோரி பெருந்ததோட்ட மலையக மக்களின் அரச தொழிற்கான விகிதாசார முறை கோரப்பட்டு சட்டவாக்கம் செய்ய முடியாதா? அரச தரப்பினர் உங்களின் ஆதரவை கோரி பாராளுமன்றிலே சமர்ப்பித்த பெரும்பாண்மையின நலன்கருதிய பல கோப்புகளுக்கு மலையக தலமைகளாகிய நீங்கள் ஆதரவு வழங்கிய பல நிகழ்வுகள் பாராளுமன்றின் அன்சாட்டில் பதிவாகியுள்ளனவே? எங்கே குறை இருக்கின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எம்மை நாமே சீர் செய்யவேண்டும். சந்தர்ப்பம் பல முறை கதவை தட்டாது. கிடைத்த சந்தர்ப்பத்தை தயங்காமல் எமது பெருந்தோட்ட மலையக சமூக தேவை மற்றும்,தொழிற் உரிமைக்காக பயன்படுத்துங்கள். நாம் என்றுமே அடிமைகளாக இருக்கவோ வாழவோ முடியாது. எமது மலையக உறவுகளும் சம தர்மத்துடன் வாழ முடியும். அதற்கான தகமை எமக்கு இருக்கின்றன. சிந்தித்து செயல்பட மலையக பாரளுமன்ற தலைமைகள் முன்வரவேண்டும் என புதிய தொழிலாளர் முனணியின் தலைவர் முரளிரகுநாதன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.