ஒட்டு மொத்த மலையக ஊழியர் சேமலாபநிதி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை தேடிப்பார்ப்பதற்கு சுதந்திரமான ஆனணக்குழு தேவை சம்பந்தமாக ஐனாதிபதிக்கு மனு. முரளிரகுநாதன்.தலைவர் புதிய தொழிலாளர் முன்னணி. ஒட்டு மொத்த மலையக தொழிளாலர்களின் ஊழியர் சேமலாப நிதியின் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை பரீசீலனை செய்வதற்காக சுதந்திரமான ஆனணக்குழுவை இந்த அரசு உடனடியாக அமுலாக்கவேண்டும். இது தொடர்பான மனு ஒன்றை புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதனால் கையொப்பம் இட்டு இன்று சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுசேவையாளர் சங்கத்தின் ஊடாக மனு அனுப்பப்பட்டுள்ளதாக புதிய தொழிலாளர் முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் முரளிரகுநாதன் மேலும் தெரிவித்திருப்பதாவதது, மலையக தொழிலாளர்கள் தனது வாழ் நாளை தேயிலை செடிகளுக்கு உரமாக்கி தனது வியர்வை, இரத்தம் அணைத்தையும் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக பாரிய அளவில் அர்ப்பனித்தவரகள். கிட்டத்தட்ட சுமார் 250,000, தொழிலாளர்களின் வாழ்வோடு நாம் அசமந்த போக்கில் இருந்து விடமுடியாது.அதனால் ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சகலவற்றையும் அதன் சகல பண கொடுக்கல் வாங்கல்களையும் பரீசீலீப்பது மற்றும் பாராளுமன்றத்திற்கு பொருப்புக்கூறுகின்ற சுதந்திரமான ஆனணக்குழுவொன்றை அமைத்து தனது நியாயமான கடமையையும் பொருப்பையும் ஆணைக்குழு நிறைவேற்றி இந்த ஒட்டுமொத்த மலையக மக்களின் ஊழியர் சேமலாப நிதியை ஊழலிருந்து பாதுக்காக்குமாறும் அந்த மனுவில் முரளிரகுநாதன் மேலும் தெரிவித்திருப்பதாக புதிய தொழிலாளர் முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.