[1]Cite error: There are <ref> tags on this page without content in them (see the help page).

யாழ். பெனின்சுலா றோட்டறக்ற் கழகம்

edit

யாழ். பெனின்சுலா றோட்டறக்ற் கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

edit

சமூக சேவையில் ஆர்வமும் துடிப்பும் கொண்ட இளைஞர் யுவதிகளை தன்னகத்தே கொண்டு தொடங்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே பல்வேறு விதமான சமூகப் பணிகளை எம் மண்ணிற்கு ஆற்றியதன் ஊடாக பலராலும் வரவேற்பினைப் பெற்று யாழ் மண்ணிலே தனக்கென ஒரு இடத்தினை தக்கவைத்து தனித்துவமிக்க ஒரு கழகமாகத் திகழ்வது யாழ்.பெனின்சுலா றோட்டறக்ற் கழகம் என்றால் அது மிகையாகாது.

யாழ்.பெனின்சுலா றோட்டறக்ற் கழகமானது தமது தாய்க்கழகமான நல்லூர் றோட்டறிக் கழகத்தின் அனுசரணையுடன் முதலாவதாக அவர்களால் பிரசவிக்கப்பட்ட குழந்தையாகும். அந்த வகையில் எமது அங்கத்தவரான சுவn;.துரைமணி றமணன் அவர்களின் அயராத உழைப்பினாலும், தாய்க்கழக ஏனைய அங்கத்தவர்களின் பூரண ஆதரவினாலும் கழக உறுப்பின்களது ஆதரவோடும் தாய்க் கழகத்தின் தலைவராக சுவn.கோகுலதாஸ் முரளிதரன் அவர்கள் பதவி வகித்த வேளையில் 2013ம் ஆண்டின் பிற்பகுதிகளில் யாழ் பெனின்சுலா றோட்டறிக்கழகத்தினை ஸ்தாபிக்கப்பட்டதோடு அதன் ஆரம்பத் தலைவராக 2014ஃ2015ம் ஆண்டிற்கான கழகத்தின் தலைமைப் பொறுப்பினை சுவச.சி.கிருபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் சர்வதேச ரீதியில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் அனைத்தும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பிற்பாடு சுவn.த.ரவினதாஸ் அவர்கள் தாய்க்கழகமான நல்லூர் றோட்டறிக் கழகத்தின் தலைமைப் பதவியினை வகித்த வேளை எமது கழக ஆலோசகராக றோட்டேறியன்.துரைமணி றமணன் அவர்கள் வழிகாட்டினார். இவ்வேளையில் 2014 ம் ஆண்டு ஆவணி மாதம் 8ம் திகதி இக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆரம்பம் தொடக்கம் வினைதிறனாக செயற்பட்டு வந்த இக்கழகத்திற்க்கு பல்வேறுபட்ட சவால்கள் உள்ளார்ந்த ரீதியிலும், வெளியிலிருந்தும் வந்தபோதும கழக உறுப்பினர்கள்; சலித்துப் போகவில்லை. தடைக்கற்கள் அனைத்தையும் படிக்கற்களாக்கி துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி நடையில் பயணித்தர்கள். எழுந்த சவால்கள் அனைத்தும் இவர்கழுக்கான சாதனைகளாக மாறின. முதல் பதவிக் காலப்பகுதியல் பல்வேறு செயற்திட்டங்களும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் தாய்க்கழகத்தால் ஏனைய கழகங்களான நீர்வேலி, சுழிபுரம், வவுனியா றோட்டறக்ற் கழகங்கள் பிரசவிக்கப்பட்டவேளை அவை அனைதிற்கும் முன்னுதாரணமாகவும் எடுத்துக் காட்டாகவும் மூத்த பிள்ளையாக இவ் யாழ் பெனின்சுலா றோட்டறக்ற் கழகம் திகழ்ந்தது,

2015ஃ2016ம் ஆண்டிற்கான கழகத்தின் தலைமைத்துவப் பொறுப்பினை பல்கலைத் மாணவனும் சிறந்த சமூகப் பற்றாளனுமான சுவச.இரட்ணசிங்கம் பிரதாபன் ஏற்றுக் கொண்டார். இவருடைய காலப் பகுதியில் தாய்க்கழகத்தின் தலைவராகப் சுவn.பரஞ்சோதி ஜனார்த்தனன் அவர்கள் பொறுப்பேற்றதோடு இக்கழகத்தின் ஆலோசகராக றோட்டேறியன்.த.ரவினதாஸ் அவர்கள் பொறுப்பேற்றார். சுவச.பிரதாபனுடைய பதவிக் காலத்தில் இக்கழகத்தின் பெயரை தனிமுத்திரையாக சமூகத்தில் பதிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு சமூகத்தில் வரவேற்பும் பெற்றது. அனைவர் மத்தியிலும் சிறந்த தலைவர் என்ற நாமத்தினை தனது காலப்பகுதியில் தக்கவைத்துக் கொண்டார் என்று கூறினால்; மிகையாகாது.

தொடாந்து 2016ஃ2017ம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பினைத் பல்கலை மாணவனும்; சிறந்த சமூகசேவை எண்ணப்பாங்கும் கொண்டவருமான சுவச.அபிஷேக் அவர்கள் ஏற்றுக் கொண்டு மிகக்குறுகியகாலத்தில் செயற்திட்டங்கள் பல செய்து இக் கழகம் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றது. இதற்கு ஆதரவாக விளங்கிய தாய்க்கழகத்தின் தற்போதைய தலைவர் சுவn.சுகந்தன் அவர்களுடைய ஒத்துழைப்பும், கழக ஆலாசகர் றோட்டேறியன்.றோய் சத்யசுதாகர் அவர்களுடைய அர்ப்பணிப்பும் இக்கழகத்திற்குத் தற்போதுள்ள மிகப்பெரும் பலமாகும். ஆர்வமும் துடிப்பும் கொண்ட ஒரு இளைஞன்ஃயுவதி அங்கத்தவராக இருக்கும் வரையில் யாழ்.பெனின்சுலா றோட்டறக்ற் கழகமானது ஏனைய கழகங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டான முன்னுதாரணமான கழகமாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

  1. ^ club magazine-ADAYALAM