இறை. மனிதர்கள் தங்களது ஒழுக்கநெறியிலிருந்து விலகாமல் அறத்துடனும் அன்புடனும் வாழ்வதற்காகவும்,அவ்வாறின்றி அறத்திற்கு எதிராக,தீய செயல்களை செய்பவராக பிற உயிர்களை துன்புருத்துபவர்களாக இருந்தால் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டவையே இம்மதம்.
இறை
editஇறை தமிழ் சொல், பொருள் இறைவன்[1](God). "யாவும் இறையே" இறையனார் ஒருவரே என்பதை உணர்த்துவதே பிரதான கோட்பாடு "நம்முள் இருப்பதும் இறையே,நம்முள் இருந்து நம்மை இயக்குவதும் இறையே, யாவும் இறையே" .ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் இக்கொள்கையையும் ஒருசேர பின்பற்றி இறையனாரை வணங்கலாம்.
இறையனார்
editஇறையனார் எல்லா இடங்களிலும் நம் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்துள்ளார். இறையனார் ஒருவரே ஆனால் அவரது பண்புகள் இவ்வெல்லாவற்றிலும் குடிக்கொண்டுள்ளது இயற்கையில், ஒர் அறிவு முதல் ஆறு அறிவு கொண்ட உயிரினங்களில், மனிதர்களாகிய நாம் பிறரிடத்தில் அன்பு செலுத்தும் பொழுதும்,பிற உயிர்களை நேசிக்கும் பொழுதும் ,பிறருக்கு உதவி புரியும் பொழுதும் இறையனாரை நம்மால் உணரமுடியும்.இறையனார் அன்பே வடிவானவர் ,எல்லாவற்றையும் பாதுகாப்பவர் ,நாம் செய்த தவறை உணர்ந்தால் நல்அருள் புரிபவர்,தான் செய்வது குற்றம் என்பதை அறிந்தும் அதை உணராமல் மேலும் தீய செயல்களை செய்தால் தண்டிப்பார் இருப்பினும் அக்குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக்கேட்டால் மனமிறங்கி அருள்வழங்கும் வள்ளல் இறையனார்.
மதங்கள்
editமதம்,சமயம்,இவை எல்லாம் மனிதர்களை நெறிப்படுத்துவதற்காக தான் தோற்றுவிக்கப்பட்டது .தற்பொழுது உலகில் கிட்டத்தட்ட (4000)நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மதங்கள் உள்ளன .அவை எல்லாம் போதிப்பது ஒன்றைதான் இறைவன் ஒருவர் இருக்கின்றார் அவரை நாம் வணங்கி வாழ்வில் உய்ய வழி தேடிக்கொள்ள வேண்டும். இத்தகைய செய்தியை தான் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக் கூறுகின்றது.(அதாவது`தாங்கள் பேசும் மொழிக்கேற்றார் போல் ,தாங்கள் வாழும் நிலத்திற்கேற்றார் போல் தம் மக்களை நல்வழிப்படுத்திட இறை பெருமானை முதன்மையாகக்கொண்டு மதங்களை தோற்றுவித்தார்கள்).உலகிலுள்ள எந்த மதங்களிலும்[2] ,மதத்திலுள்ள வேதங்களிலும் வன்முறை,சாதி,தீண்டாமை இதுப்போன்று சக உயிர்களுக்கும்,பிற உயிரினங்களுக்கும் துன்பம் தரக்கூடியவற்றை ஆதரித்து கூறவே இல்லை .பின் எப்படி இது போன்ற செயல்கள் நடக்கின்றன என்றால் ,எல்லாம் அவர்அவர் சுயலாபத்திற்காக தான்.அதிலும் குறிப்பாக 'இறையனார்' பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரிக்கிறார்கள் .மதம் என்பது மனிதனை வழிப்படுத்தி ,நெறிப்படுத்தி ,சீர் செய்து நல்வழியில் கொண்டுச்செல்வதற்கே உண்டாகின.ஆனால் இதையேல்லாம் புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் மக்கள். ஒரு நாள் இத்தகைய புரிதல் மக்களிடத்தே உண்டாகுமேயானால் அன்று இவ்வுலகில் சாதிகள்,பிரிவுகள்,தீண்டாமை இவையெல்லாம் நீங்கி அன்பே பொருளாய் திகழும் இறையனாரின் வழியில் உலகமெங்கும் அமைதிப்பெருகி இப்பூவுலகம் இன்புற வாழும். எனவே அந்தந்த மதத்தினை பின்பற்றுபவர்கள் அதில் கூறப்பட்டுள்ள நல்லவற்றையும் பின்பற்றி அதற்கேற்றார் போல் நடந்து கருணை கடலான இறையனாரை சென்றடையுங்கள். "யாவும் இறையே".
கோட்பாடு
edit"யாவும் இறையே" எங்கும் எதிலும் உள்ளவர் இறையனார் ,இருப்பினும் இறையனார் ஒருவரே,அவர் தூய அன்பின் வடிவானவர்."இறையனார்" இறைவனை குறிக்கும் தமிழ் சொல்.மேலும் (ஃ) எனப்படுவது அறம்-அன்பு-அமைதி இம்மூன்றை குறிக்கும் இவைமூன்றும் தான் இம்மதத்தின் முக்கிய புள்ளிகள்.மனித வாழ்வை சிரக்க நெறிப்படுத்தக்கூடிய இம்மதமானது உலகில் உள்ள எல்லா மதங்களையும் உள்ளடக்கி அவற்றுள் கூறப்பட்டுள்ள நல்லவற்றை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.மண்ணில் தோன்றி இம்மண்ணிலே மறையக்கூடிய மனித இனமாகிய நாம் நமது ஐம்புலன்களையும் அடக்கி பரம்பொருளாகிய இறையனாரை வழிபட வேண்டும்.எல்லாம்வல்ல அந்த இறைவனின் முன்பு சிறியவர் இல்லை பெரியவர் இல்லை எல்லோரும் ஒன்று தான்.எனவே என்றும் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும்.
இறையனாரை வணங்கும் முறை
editஇறையனாரை நாம் தூய அன்பு கொண்டு வணங்குதல் வேண்டும்.
மனிதப்பண்புகள்
editமனிதர்களின் பண்புகள் எவ்வாறு இருத்தல் வேண்டும்.
editசெய்யக்கூடியவை
edit- இறையனாரை வணங்குதல்
- அறம் தவறாமல் இருத்தல்
- பிறரிடத்தில் அன்புடன் இருத்தல்
- பொறுமையை கடைப்பிடித்தல்
- பணிவுடன் இருத்தல்
- ஒர் அறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிரினங்களை நேசித்தல்
- இயற்கையை நேசித்தல்
- அறியாமையை நீக்கி சரி எது தவறு எதுவென்று பகுத்து அறிதல்
- பெரியோர்களை மதித்தல்
- தம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்தல்
செய்யக்கூடாதவை
edit- பொய்பேசுதல்
- தீயச்சொற்களை உபயோகித்தல்
- தீய செயல்களில் ஈடுபடுதல்
- பிறருக்கு தீங்கு எண்ணுதல்
- பிறரை துன்புருத்துதல்
- இயற்கையை அழித்தல்
- பெரியோர்களை ஏலனம் செய்தல்
- அறம் தவறுதல்
- தன் மனைவியை தவிற வேறு பெண்களுடன் உறவுக்கொள்ளுதல்
- பிறார் மனைவியை நோக்கல்
- அகந்தையுடன் இருத்தல்
- பொறாமை கொள்ளுதல்
- நான் உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் என்று பிரித்துப்பார்த்தல்
- இறையனார் பெயரைக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுதல் (இறை எனப்படுவதிலிருந்து விலகி இல்லாதவற்றையெல்லாம் கூறுதல்)
- சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குதல்
- பிற உயிரினங்களை துன்புருத்தல்
- அறியாமையில் மூழ்கிக்கிடத்தல்
- இதில் கற்றதின் படி நடந்துக்கொள்ளாமல் இருத்தல்.
- ^ "இறைவன் (அகப்பார்வை)", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2012-12-23, retrieved 2021-07-29
- ^ "List of religions and spiritual traditions", Wikipedia, 2021-07-24, retrieved 2021-07-29
Category:Divine Category:Peace