== அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு == இந்த பதிவை இடும் முன்னரே பல வளைத்தளங்களில் தேடி அதன் முடிவுகளை எடுத்து இங்கே பதிவிட்டு உள்ளேன் இந்த பதிவை நான் எழுத வில்லை. வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட.

மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன்.

கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே.

முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ளேன்.இது ஏன் என்பதற்கு புராண தெய்வீக காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் ஒரு கதை உண்டு - அது எனக்கு கொஞ்சம் நம்பும்படியான கதை. தமிழர்களில் ஆறு கடவுள் வழிபாட்டு முறை இருந்தாதாகவும் - குறைந்தது ஐந்து ( ஐந்திணை என்கிறது தமிழ் ) - அவற்றை ஒன்றிணைத்து ஒரு மார்க்கமாக மாற்ற ஒரு பெரிய முயற்சி எடுக்கப்பட்டு - உருவான ஒன்றே ஆறு முகம் ( ஆறு மார்க்கம் ) என்கிறது அந்த கதை. இதற்கு ஆதாரம் உள்ளது என்கிறார்கள் சிலர் - சன்மார்க்கம் என்கிற பதம் அதையே சொல்வதாக சொல்கிறார்கள்.

நான் தல வரலாற்றை பற்றி மட்டுமே எழுதுவதால் - இவை பற்றி எழுதுவதை நிறுத்திக்கொண்டு ஒரு தளம் நோக்கி பயணிக்கிறேன். அருகன் என்கிற ஒரு கடவுளை பற்றி நம்மில் எத்தனை பெயர் கேள்வி கேட்டு உள்ளோமோ தெரியாது - முருகனை பற்றி நாம் எல்லோரும் கேள்வி பட்டு இருப்போம்.

முருகனின் திரு தளங்களில் முக்கியமான ஒன்று பழனி. பழனி என்கிற மழைக்குள்ளும் பல வரலாறுகள் இருக்கலாம். அதிலும் போகர் என்கிற சித்தர் - புலிப்பாணி என்கிற சீடனுடன் சில வரலாறுகளையும் சில மருத்துவத்தையும் விட்டே சென்று உள்ளார்.

புலிப்பாணி என்கிற பெயர் சீன மொழியில் யோ என்று பதிவு செய்யப்படுவதாக சொல்ல்பவர்கள் உண்டு. சீனர்களுக்கு நம்முடன் என்ன தொடர்பு என்பதை - குங் ப்ஹு பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கலாம்.

குங் ப்ஹு என்பது ஒரு தமிழர் கலை என்பதாகவே சீனம் பதிவு செய்கிறது. குங் ப்ஹுவை கற்று தந்தவர் - புத்தி தார பல்லவர் அல்லது புத்தி தார பெருமான் என்ற பல்லவ அரசரோ பெருமானோ.அவரை போதி தர்மர் ( அதாவது புத்த மதத்தை சார்ந்தவர் ) என்று சீனம் சொல்கிறது.

கொரிய மொழியில் போதி தர்மரின் கதையை திரைப்படமாக பதிவு செய்யும்போது - போதி தர்மர் தென் நாட்டை சார்ந்தவர் என்பதை சித்திரம் போட்டே பதிவு செய்கிறார்கள். இவரை பற்றிய வரலாற்றை அதிக பட்ச கற்பனயோடு நான் எழுத ஆரம்பித்த போது - நண்பன் ஒருவனிடம் பேசிய போது - தஞ்சை பல்கலையில் ஒருவர் இது தொடர்பாக ஆய்வு செய்வதாக சொன்னான். மகிழ்ச்சி.

இந்த போதி தர்மரின் மாணவன் யோ என்கிறது சீனம் என்கிறார்கள். குங் ப்ஹு என்கிற கலை மிருகங்களின் தற்காப்பு உத்திகளுடன் சிலம்பம் கலரிப்பாட்டு ஆகிவை கலந்து உருவானது என்பவை ஆய்வாளர்கள் கருத்து. புலியை போன்று வித்தை செய்வதில் இவன் சிறந்து விளங்கி இருக்கலாம். பாணி என்பது நடை , மாதிரி என்கிற பொருள் படும். அதாவது அவருக்கு என்று ஒரு பாணி உள்ளது என்று நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்.

இந்த போதி தர்மர் - ஒரு வேலை போகரோ என்பது ஒரு சந்தேகம். வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன். போகர் இரண்டு சிலை செய்து உள்ளார். இதில் எதுவும் கருத்து இருக்கலாம். சீனம் என்ன சொல்கிறது என்றால் - போதி தர்மர் தமிழ் மண்ணில் இருந்து வந்ததாகவும் பின்னர் தமிழ் மண்ணுக்கே சென்றதாகவும் சொல்கிறது. இந்த கடைசி பயணம் மரணத்திற்கு முன் நடந்தது என்கிறது சீனம். அப்போது "நான் அமிதாப்பா புத்தர் இருக்கும் நிலம் நோக்கி பயணிக்க" போவதாக சொல்லி சென்றாராம். இந்த அமிதாப்பா புத்தரின் இடம் ஜப்பானோ என்கிற சந்தேகம் உள்ளது. அது தமிழ் மண்ணாகவும் இருக்கலாம். தமிழும் சீனமும் ஜப்பானிய மொழியை பாதித்திருக்க கூடம் என்று ஆய்வுகள் உள்ளன. தமிழின் தாக்கத்தினால் உருவான ஒரு மங்கோலிய மொழியோ ஜப்பானிய மொழி என்று ஆய்வுகள் செயப்பட்டாலும் அதில் பெரிய வெற்றி கிட்டியதாக தெரியவில்லை. தமிழில் இருந்துதான் ஜப்பானிய மொழி தோன்றி இருக்கும் என்பதை சிலர் முன்வைப்பதை பலர் நம்ப தயார் இல்லை.

முதலில் ஒரு சிலையை வைத்து விட்டு பயணம் செய்த போகர் தான் திரும்பி வந்த போது இன்னொரு சிலையை செய்து வைத்து விட்டு இருக்கலாம் என்று நம்புவதற்கு ஆதரங்கள் உள்ளனவா என்று தெரியவில்லை. அதிலும் போகரின் வாழ்வும் போதி தர்மரின் வாழ்வும் வெவ்வேரனவயாகவே தெரிகின்றன.

புலி பாணி மற்றும் யோ என்பது வேண்டும் ஆனால் கொஞ்சம் ஒற்றுமை கொண்டு இருக்கலாம். போதி தர்மர் பயணம் சென்ற காலத்தில் தாய்லாந்து நாட்டில் பல்லவ வட்டெழுத்துக்கள் வாயிலாக தமிழ் பயன்பாட்டில் இருந்து உள்ளது. இன்று தாய் மொழி பல்லவ தமிழ் வட்டேளுத்துகளில் இருந்தே அதிகம் தாக்கம் பெற்று திகழ்வதாக சொல்லப்படுகிறது. தமிழ் தாய் லாந்தில் புழக்கத்தில் இருந்தது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பழனியில் நிறையவே வரலாறுகள் பாதுகாக்கபடுகிறது நமக்கு தெரியாமல் என்கிற சந்தேகம் உள்ளது. சேரமன்னனை நோக்கி பழனி ஆண்டவர் இருப்பதே கேரளத்தின் வளங்களுக்கு காரணம் என்று என மலையாள நண்பர் ஒரு முறை சொன்னார். உண்மையா என்று தெரியாது - இது ஒரு நம்பிக்கை.

பழனி மலையில் நிறைய அடுக்குகள் உள்ளன. அவற்றில் சில செய்திகள் ஆங்காங்கே பதிவு செய்ய பட்டிருக்கலாம். செய்திகளை பதிவு செய்து காக்கவே தஞ்சையில் கோயில் கட்டினான் ராசராசன் என்று நானே சில நேரங்களில் நினைத்தது உண்டு.

தாங்கள் கட்டிய கோயில்கள் அழிந்தததன் காரணமாகவே மகேந்திர வர்மன் குகை கோயில் கட்டினான் என்கிர்ரார்கள வரலாற்று ஆய்வாளர்கள். இப்படி செய்தபோது பெருமை கொண்ட மகேந்திரவர்மன் - தன்னை விசிதிரவர்மன் என்று அழைத்துகொண்டானாம்.