அற்புதம்மாள் சத்திரம் பொறையார் ஸ்தாபனம் 02-09-1863 ஆம் ஆண்டு அற்புதம்மாள் அவர்களின் முயற்சியினால் நாகப்பட்டிணம் மாவட்டம் , தரங்கம்பாடி தாலுக்கா , எருக்கட்டான்சேரி கிராம எல்லைகுட்பட்ட பொறையார் வீரப்பபிள்ளைத்தெருவில் அமையப்பட்டுள்ளது. அற்புதம்மாள் சத்திரம் சார்ந்த சொத்துகள் பொறையார் மற்றும் தரங்கம்பாடி கிராமங்களில் நன்செய் நிலமாகவும் இருந்தது. காலபோக்கில் நிலங்கள் யாவும் தனிநபர் வசமாக்கப்பட்டது. அற்புதம்மாள் சத்திரம் தர்ம காரியம் மற்றும் ஜிவ காருண்ய பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. திருமண சூப காரியம் , சிவனடியார்கள் , ஏழைகள் தங்கும் மடமாகவும் செயல்பட்டு வந்தது.ஆனால் டிரஸ்ட் நிர்வாகம் செயல்படாத காரணத்தினால் அற்புதம்மாள் சத்திரம் இடிக்கப்பட்டு தனிநபர் வசமாகி வருகிறது.ஷ அற்புதம்மாள் சத்திர சொத்துகளை தமிழ் நாடு அரசு கவனம் செலுத்தி பொது மக்கள் பயன்பாட்டிற்கு

கொண்டு வருமாறு பொறையார் மக்கள் , பொது நலன் விரும்பிகள் கோரிவருகின்றனர்