ஐந்து நிலை மறவர் நாடு edit

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே 'இளமக்கள்' என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துநிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.இந்த ஐந்து மங்கலங்களிலும் இளமக்கள்(எ)இளம்மறவர் என்ற சமூகத்தவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர்.அந்த இளம்மாக்கள் வம்சத்து இளம்மறவர்கள் இந்தபகுதியின் ஐந்து மங்கலங்களிலும் தலைமை பதவிகளான ஐந்துநாட்டார்கள் என அழைக்கபடுகின்றனர்.இவர்களுக்கு இங்கு 'அம்பலம்' பட்டம்.பொதுவாக மறவர்களுக்கு தேவர் பட்டமே இருப்பினும் இவர்களுக்கு இங்கு அம்பலப்பட்டம் உள்ளது.இவர்கள் சிங்கம்புனேரி கோயில் திருவிழக்கலிலும் முதல்மரியாதை வாங்கும் இனமாகவும் உள்ளது.

ஐந்து மங்களங்கள் edit

  1. சதுர்வேதிமங்கலம்
  2. கண்ணமங்கலம்
  3. முல்லைமங்கலம்
  4. சீர்சேந்தமங்கலம்
  5. வேழமங்கலம்